ChatGPT-ஐத் தமிழில் பயன்படுத்துவது எப்படி?

ChatGPT என்பது OpenAI நிறுவனத்தின் AI chatbot. கேள்வி கேட்கலாம், கடிதம் எழுதச் சொல்லலாம், பாடம் விளக்கச் சொல்லலாம்; இவை எல்லாம் தமிழிலேயே முடியும். ChatGPT-இன் menus, buttons-ஐயும் தமிழில் மாற்றலாம்: OpenAI-இன் உதவிப் பக்கத்தில் உள்ள ஆதரிக்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழும் உள்ளது.

தொடங்குவதற்கு முன்

  • இலவச (Free) plan-இலேயே தொடங்கலாம். Go, Plus, Pro போன்ற கட்டண plans அதிக பயன்பாட்டு வரம்பும் கூடுதல் வசதிகளும் தருகின்றன; விலைகளுக்கு எங்கள் ChatGPT review பக்கத்தைப் பாருங்கள்.
  • chatgpt.com இணையதளத்திலோ, Android / iPhone app-இலோ பயன்படுத்தலாம்.

படிப்படியாக

  1. Account தொடங்குங்கள்: chatgpt.com-க்குச் சென்று (அல்லது app-ஐத் திறந்து) Sign up அழுத்துங்கள். Email முகவரி அல்லது திரையில் காட்டப்படும் மற்ற login வழிகள் மூலம் பதிவு செய்யலாம்.
  2. மொழியைத் தமிழுக்கு மாற்றுங்கள்: Browser-இல் profile icon → Settings → General → Language → தமிழ். Mobile app-இல் sidebar-ஐத் திறந்து profile icon → App → Language. Login செய்திருந்தால் மட்டுமே இந்த setting-ஐ மாற்ற முடியும்.
  3. தமிழில் type செய்யுங்கள்: Phone keyboard-இல் (உதா: Gboard) தமிழ் மொழியைச் சேர்த்துக்கொள்ளலாம். Tanglish-இல் type செய்தாலும் ChatGPT பொதுவாகப் புரிந்துகொள்ளும்.
  4. பதில் தமிழில் வர: கேள்வியைத் தமிழில் கேட்டால் பொதுவாகத் தமிழில் பதில் வரும். உறுதியாக வேண்டுமென்றால் prompt-இன் கடைசியில் “எளிய தமிழில் பதில் சொல்” என்று சேர்த்துக்கொள்ளுங்கள்.
  5. குரலில் பேசுங்கள்: Message bar-இல் உள்ள Voice icon-ஐ அழுத்திப் பேசலாம். நீங்கள் பேசும் மொழியை ChatGPT தவறாகப் புரிந்துகொண்டால் Settings → Voice → Language-இல் தமிழைத் தேர்ந்தெடுங்கள். இலவச plan-இல் Voice பயன்பாட்டுக்கு வரம்பு உண்டு.

நல்ல பதில் பெற 4 வழிகள்

  • நீங்கள் யார், யாருக்காக என்று சொல்லுங்கள் (“நான் 10-ஆம் வகுப்பு மாணவி…”).
  • எந்த வடிவில் வேண்டும் என்று சொல்லுங்கள்: points, அட்டவணை, 100 சொற்கள்.
  • முதல் பதில் சரியில்லையென்றால் அதே chat-இல் திருத்தச் சொல்லுங்கள்: “இன்னும் சுருக்கமாக”, “முறையான தமிழில்”.
  • தயாரான prompts-க்கு எங்கள் ChatGPT Prompts பக்கத்தைப் பாருங்கள். Prompt என்றால் என்ன என்றும் படிக்கலாம்.

கவனிக்க வேண்டியவை

  • ChatGPT தவறு செய்யலாம் (AI Hallucination). தேதிகள், சட்டம், மருத்துவம், பணம் தொடர்பான தகவல்களை நம்பகமான ஆதாரத்தில் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
  • தமிழ் பதில்களில் இலக்கணப் பிழைகளும் வரலாம்; முக்கியமான கடிதங்களை அனுப்பும் முன் ஒருமுறை படித்துப் பாருங்கள்.
  • Aadhaar எண், வங்கி விவரங்கள், passwords போன்றவற்றை chat-இல் பகிர வேண்டாம்.
  • உங்கள் உரையாடல்கள் model-ஐப் பயிற்றுவிக்கப் பயன்படக்கூடாது என்றால் Settings → Data Controls-இல் “Improve the model for everyone” என்பதை off செய்யலாம்.
  • ஒரு chat-ஐ archive செய்தால் அது sidebar-இலிருந்து மட்டுமே மறையும்; முழுமையாக நீக்க delete செய்ய வேண்டும்.

அடுத்து படிக்க

ChatGPT-க்கு மாற்று தேடுகிறீர்களா? ChatGPT vs Gemini, ChatGPT vs Claude ஒப்பீடுகளையும், Gemini-ஐத் தமிழில் பயன்படுத்துவது எப்படி வழிகாட்டியையும் பாருங்கள்.

[tat_newsletter placement="in-content"]

Share: