AI Agent

AI Agent என்பது கேள்விக்குப் பதில் சொல்வதோடு நிற்காமல், ஒரு இலக்கை அடையப் பல படிகளைத் தானே திட்டமிட்டுச் செயல்படுத்தும் AI அமைப்பு. இணையதளங்களில் தேடுவது, படிவங்களை நிரப்புவது, files உருவாக்குவது, மற்ற apps-ஐப் பயன்படுத்துவது போன்ற செயல்களை அது செய்யலாம்.

Chatbot-உடன் வேறுபாடு: chatbot நீங்கள் கேட்டதற்கு உரையில் பதில் தரும்; agent உங்கள் சார்பில் செயல்களைச் செய்யும். உதாரணம்: “சென்னையிலிருந்து மதுரைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை செல்லும் ரயில்களைத் தேடி, நேரம் மற்றும் கட்டணத்துடன் அட்டவணையாகக் கொடு”.

கவனம்: agent உங்கள் சார்பில் செயல்படுவதால், பணம் செலுத்துவது, messages அனுப்புவது, files நீக்குவது போன்ற செயல்களுக்கு முன் அது உங்கள் ஒப்புதலைக் கேட்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். Passwords, வங்கி விவரங்களை agent-இடம் கொடுக்க வேண்டாம்.

[tat_newsletter placement="in-content"]

Share: