தமிழ் மொழிபெயர்ப்புக்குச் சிறந்த AI கருவிகள்

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்க இன்று பல இலவச AI கருவிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைக்குப் பொருந்தும். கீழே உள்ள Tamil மதிப்பெண்கள் (5-க்கு) எங்கள் tool பக்கங்களில் உள்ள Tamil Support மதிப்பீடு.

விரைவான, இலவச மொழிபெயர்ப்பு

  • Google Translate (Tamil 5/5): web, app இரண்டிலும் இலவசம். சொற்கள், வாக்கியங்கள், அறிவிப்புப் பலகைகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கு முதல் தேர்வு. Developers-க்கு Cloud Translation API உண்டு: 10 லட்சம் எழுத்துகளுக்கு $20, மாதம் முதல் 5 லட்சம் எழுத்துகள் இலவசம்.
  • Microsoft Translator (Tamil 4/5): consumer apps இலவசம். Google Translate-இன் மொழிபெயர்ப்பு சரியாக இல்லையென்றால் இரண்டாவது கருத்துக்குப் பயன்படும்.
  • Bhashini (Tamil 5/5): இந்திய அரசின் மொழித் தளம் (National e-Governance Division). இந்திய மொழிகளுக்கிடையே மொழிபெயர்க்க app உண்டு.

சூழலுக்கு ஏற்ற மொழிபெயர்ப்பு

  • ChatGPT, Gemini: “இந்தக் கடிதத்தை முறையான தமிழில் மொழிபெயர்” அல்லது “எளிய பேச்சுத் தமிழில் சொல்” என்று தொனியையும் சொல்லலாம். நீண்ட கட்டுரைகள், கடிதங்கள், சுருக்கங்களுக்கு இது பெரிதும் உதவும். ChatGPT vs Gemini ஒப்பீட்டையும் பாருங்கள்.

Developers, ஆய்வாளர்களுக்கு

  • Sarvam Translate (Tamil 4/5): Hugging Face-இல் இலவசமாக download செய்யக்கூடிய open model; Sarvam API வழியாக 1,000 எழுத்துகளுக்கு ₹2.
  • AI4Bharat IndicTrans (Tamil 4/5): இந்திய மொழிகளுக்கான open-source மொழிபெயர்ப்பு model; Hugging Face, GitHub-இல் இலவசம்.

DeepL ஐரோப்பிய மொழிகளுக்குப் பிரபலம், ஆனால் தமிழுக்கு எங்கள் மதிப்பெண் 1/5 மட்டுமே.

மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க 3 வழிகள்

  • பெயர்கள், எண்கள், தேதிகள் சரியாக வந்துள்ளனவா என்று பாருங்கள்.
  • மொழிபெயர்ப்பை மீண்டும் மூல மொழிக்கு மொழிபெயர்த்துப் பார்த்தால் பொருள் மாறியிருக்கிறதா என்று தெரியும்.
  • சட்டம், மருத்துவம், அரசு ஆவணங்களுக்கு AI மொழிபெயர்ப்பை மட்டும் நம்ப வேண்டாம்; மனித மொழிபெயர்ப்பாளரிடம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

எல்லா மொழிபெயர்ப்புக் கருவிகளும்: AI Translation Tools.

[tat_newsletter placement="in-content"]

Share: