Large Language Model (LLM) என்பது மிகப் பெரிய அளவிலான உரைகளை (text) வைத்துப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு AI model. ஒரு வாக்கியத்தில் அடுத்து வரக்கூடிய சொல்லை (சரியாகச் சொன்னால் அடுத்த token-ஐ) கணிப்பதன் மூலம் அது உரையைப் புரிந்துகொள்கிறது, எழுதுகிறது.
ChatGPT, Gemini, Claude போன்ற chatbots-இன் பின்னால் இருப்பவை LLM-கள் தான். கேள்விக்குப் பதில் சொல்வது, மொழிபெயர்ப்பது, சுருக்குவது, code எழுதுவது எல்லாம் அவற்றால் முடியும்.
LLM-கள் உண்மையை ஒரு database-இல் தேடிப் பதில் சொல்வதில்லை; நம்பத்தகுந்ததாகத் தோன்றும் உரையை உருவாக்குகின்றன. அதனால் தான் சில நேரம் தவறான தகவலையும் உறுதியாகச் சொல்கின்றன. பார்க்க: AI Hallucination.