AI photo editing இரண்டு விதமாக நடக்கிறது. ஒன்று, என்ன மாற்றம் வேண்டும் என்று வார்த்தைகளில் எழுதினால் AI படத்தை மாற்றுவது. இன்னொன்று, background நீக்கம், பொருள் நீக்கம், தெளிவாக்கம் போன்ற குறிப்பிட்ட வேலைகளை ஒரே tap-இல் செய்யும் கருவிகள். உங்கள் தேவைக்கு ஏற்ப எதைப் பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்.
1. எழுதிச் சொல்லி edit செய்வது
- Gemini (Tamil 5/5): படத்தை upload செய்து “பின்னணியைக் கோயில் வாசலாக மாற்று” என்று தமிழிலேயே கேட்கலாம். இதன் பின்னால் இருப்பது Nano Banana model.
- ChatGPT (Tamil 4/5): Go plan (மாதம் ₹399) முதல் image generation உண்டு.
- Meta AI (Tamil 3/5): WhatsApp, Instagram-க்குள்ளேயே இலவசமாகப் படம் திருத்தலாம்.
2. ஒரே tap-இல் edit செய்யும் கருவிகள்
- பின்னணி நீக்க: Photoroom, Clipdrop, Adobe Express. விரிவாக: பின்னணியை நீக்குவது எப்படி.
- தேவையில்லாத பொருள்களை நீக்க: Clipdrop-இன் cleanup, Pixlr-இன் generative fill.
- மங்கலான படத்தைத் தெளிவாக்க: Remini, Upscayl. விரிவாக: போட்டோவைத் தெளிவாக்குவது எப்படி.
- முழுமையான editor வேண்டுமென்றால்: Picsart, Fotor (Basic இலவசம்); photographers-க்கு Luminar Neo.
எழுதிச் சொல்லி edit செய்வது: படிப்படியாக
- Gemini அல்லது ChatGPT-ஐத் திறங்கள்: உங்கள் account-இல் login செய்யுங்கள்.
- படத்தை upload செய்யுங்கள்: Phone gallery-யிலிருந்து edit செய்ய வேண்டிய படத்தைத் தேர்ந்தெடுங்கள்.
- ஒரு மாற்றத்தை மட்டும் கேளுங்கள்: “பின்னணியை மாலை நேரக் கடற்கரையாக மாற்று” போன்று தெளிவாக எழுதுங்கள்.
- எதை மாற்றக்கூடாது என்றும் சொல்லுங்கள்: “என் முகம், உடை, நிறத்தை மாற்றாதே” என்று சேர்த்தால் முகம் மாறுவது குறையும்.
- திருத்திக்கொண்டே இருங்கள்: முதல் முடிவு சரியில்லையென்றால் அதே chat-இல் “ஒளியை இன்னும் இயல்பாக்கு” என்று கேளுங்கள்; பிடித்ததை download செய்யுங்கள்.
தயாரான prompts
- பழைய புகைப்படத்தைப் புதுப்பிக்க
- Selfie-ஐ professional profile photo-வாக்க
- தேவையில்லாதவற்றை நீக்க
- மேலும்: Gemini Prompts
நல்ல முடிவுக்கு
- ஒரே prompt-இல் பல மாற்றங்கள் கேட்டால் AI குழம்பும்; ஒவ்வொன்றாகக் கேளுங்கள்.
- AI படத்தில் தமிழ் எழுத்துகள் அடிக்கடி தவறாக வரும்; எழுத்துகளைப் பிறகு Canva-வில் சேருங்கள்.
- Original படத்தை எப்போதும் தனியாக வைத்திருங்கள்.
கவனிக்க வேண்டியவை
- Gemini உருவாக்கும் அல்லது edit செய்யும் படங்களில் SynthID எனும் கண்ணுக்குத் தெரியாத digital watermark இருக்கும்.
- பிறரின் படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் edit செய்யவோ பகிரவோ வேண்டாம்; போலிப் படங்கள் உருவாக்குவது சட்டச் சிக்கலைத் தரலாம்.
- இலவச plans-இல் உருவாக்கியவற்றை வணிகத்துக்குப் பயன்படுத்தும் முன் ஒவ்வொரு கருவியின் விதிகளையும் படியுங்கள்.
எல்லா பட AI கருவிகளும்: AI Image Generator.